முதல் தேர்தலில் மண்ணை கவ்விய மு.க.ஸ்டாலின்! கருணாநிதி போட்டியிடாத தேர்தலும் அதுதான்! #ttnflashback

முதல் தேர்தலில் மண்ணை கவ்விய மு.க.ஸ்டாலின்! கருணாநிதி போட்டியிடாத தேர்தலும் அதுதான்! #ttnflashback

தமிழக சட்டமன்றத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. 1957ம் ஆண்டு தொடங்கி 2016ம் ஆண்டு வரையிலும் 13 தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வென்றார் கருணாநிதி.

முதல் தேர்தலில் மண்ணை கவ்விய மு.க.ஸ்டாலின்! கருணாநிதி போட்டியிடாத தேர்தலும் அதுதான்! #ttnflashback

57ல் குளித்தலை தொகுதியிலும், 62ல் தஞ்சாவூர் தொகுதியிலும், 67ல் சைதாப்பேட்டை தொகுதியிலும், 71ல் மீண்டுஇம் சைதாப்பேட்டை தொகுதியிலும், 77ல் அண்ணாநகர் தொகுதியிலும், 80ல் அண்ணாநகரிலிம், 89ல் துறைமுகம் தொகுதியிலும், 91ல் மீண்டும் துறைமுகம் தொகுதியிலும், 96ல் சேப்பாக்கம் தொகுதியிலும், 2001ல் பாஜகவுடன் கூட்டணிஅமைத்து சேப்பாக்கம் தொகுதியிலும், 2006ல் சேப்பாக்கம் தொகுதியிலும், 2011ல் திருவாரூர் தொகுதியிலும், 2016ல் மீண்டும் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார்.

போட்டியிட்ட அத்தனை தேர்தலிலும் கருணாநிதி வென்றார். ஆனால், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மு.க.ஸ்டாலின் மண்ணை கவ்வினார். 84ல் நடந்த 8வது சட்டமன்ற தேர்தலில்தான் ஸ்டாலின் முதன் முதலாக போட்டியிட்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியை கண்டார். கருணாநிதி அப்போது மேலவை உறுப்பினராக இருந்ததால் அவர் அத்தேர்தலில் போட்டியிடவில்லை.

முதல் தேர்தலில் மண்ணை கவ்விய மு.க.ஸ்டாலின்! கருணாநிதி போட்டியிடாத தேர்தலும் அதுதான்! #ttnflashback

77ல் நடந்த 6ஆவது தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வரான எம்.ஜி.ஆர். , 80ல் நடந்த 7வது சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று 2வது முறையாக முதல்வரானார். இந்த ஆட்சிக்காலத்தில்தான் அதிமுகவின் வரலாற்று சாதனையாக சொல்லப்படும் சத்துணவு திட்டத்தினை கொண்டு வந்தார் எம்.ஜி.அர்.

77, 80 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர். 2வதுமுறையாக முதல்வராக இருக்கையில், 85ல்தான் தேர்தல் வந்திருக்க வேண்டும். ஆனால், பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால், அதே சமயம் முதல்வர் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டதால் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் தேசிய அரசியலிலும் தமிழ்மாநில அரசியலிலும் மாற்றம் ஏற்பட்டது.

முதல் தேர்தலில் மண்ணை கவ்விய மு.க.ஸ்டாலின்! கருணாநிதி போட்டியிடாத தேர்தலும் அதுதான்! #ttnflashback

இந்திராகாந்திக்கு பின்னர் பிரதமரான ராஜீவ்காந்தி, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கப்போவதாக அறிவித்ததும், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்களும் சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

71க்கு பிறகு 84ல் தான் சட்டபைக்கும், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. 24.12.1984 அன்று தேர்தல் நடந்தது. கருணாநிதி அப்போது மேலவை உறுப்பினராக இருந்ததால் அவர் அத்தேர்தலில் போட்டியிடவில்லை.

முதல் தேர்தலில் மண்ணை கவ்விய மு.க.ஸ்டாலின்! கருணாநிதி போட்டியிடாத தேர்தலும் அதுதான்! #ttnflashback

அமெரிக்காவில் படுத்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் வென்றார். முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை கண்டார்.

அடுத்து 89ல் மீண்டும் ஆயிரம் விளக்கில் போட்டியிட்டு வென்றார். 91ல் மீண்டும் ஆயிரம் விளக்கில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 96 மீண்டும் ஆயிரம் விளக்கில் வென்றார். 2001ல் மீண்டும் ஆயிரம் விளக்கில் வென்றார். 2011ல் தொகுதியை மாற்றி கொளத்தூரில் வென்றார். 2016ல் மீண்டும் கொளத்தூரில் வென்றார்.