“சங்கி மாஃபியா பாண்டியராஜன்… பாஜகவின் ஊதுகுழல்” – அமைச்சரை அதிரவைத்த ஸ்டாலின்!

 

“சங்கி மாஃபியா பாண்டியராஜன்… பாஜகவின் ஊதுகுழல்” – அமைச்சரை அதிரவைத்த ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவருகிறார். நேற்று ஆவடியில் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “ஆவடி தொகுதி மக்களுக்கு ஒரு முக்கியக் கடமை இருக்கிறது. மாஃபா பாண்டியராஜனைத் தோற்கடிக்க வேண்டும். அதிமுகவில் இருந்தபடி பாஜகவுக்கு வேலை செய்யும் முழுமையான சங்கி அவர். கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த அவர் தமிழ் வளர்ச்சிச் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர்.

“சங்கி மாஃபியா பாண்டியராஜன்… பாஜகவின் ஊதுகுழல்” – அமைச்சரை அதிரவைத்த ஸ்டாலின்!

அவர் அதிமுகவில் இருப்பதற்கு முன்பு, அவரை ஒரு கட்சியிலிருந்து அந்தக் கட்சியின் தலைவர் நீக்கினார் என்பது உங்களுக்குத் தெரியும். ஏன் நீக்கினார்? அவர் மாஃபா பாண்டியராஜனாக அல்லாமல், மாஃபியா பாண்டியராஜனாக இருந்தார். அதனால் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப் பிறகு அதிமுகவில் சேர்ந்தார். இப்போது பாஜகவின் ஊதுகுழலாக அதிமுகவில் இருந்து கொண்டிருக்கிறார். அந்த மாஃபியா பாண்டியராஜனை இந்தத் தொகுதியில் இருக்கும் மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை” என்றார்.

“சங்கி மாஃபியா பாண்டியராஜன்… பாஜகவின் ஊதுகுழல்” – அமைச்சரை அதிரவைத்த ஸ்டாலின்!

மற்ற அமைச்சர்களை விடுத்து மாஃபா பாண்டியராஜனை மட்டும் ஏன் ஸ்டாலின் முழுமையான சங்கி என்று சொன்னார்?

அதிமுகவில் இருக்கும் பாஜககாரர் என அமைச்சர் பாண்டியராஜனை அவ்வப்போது நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாகவே அவரின் பேச்சும் செயல்பாடுகளும் அமையும். ஏனென்றால் பாண்டியராஜனின் அரசியல் ஆரம்பமே பாஜகவில் தான் ஆரம்பித்தது. அந்த வரலாற்று எச்சம் இன்னும் பாண்டியராஜனின் மனதிலிருந்து அகலவில்லை போலும். பாஜகவிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்து எம்எல்ஏவானார்.

“சங்கி மாஃபியா பாண்டியராஜன்… பாஜகவின் ஊதுகுழல்” – அமைச்சரை அதிரவைத்த ஸ்டாலின்!

அதிலிருந்தும் விலகி அதிமுகவில் இணைந்த உடனே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பதவியையும் பெற்றார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது டெல்லிக்குச் சென்று கையெழுத்து போட்டு நீட் தேர்வு தமிழ்நாட்டின் உள்ளே வர பாண்டியராஜன் தான் காரணம் என்று இன்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. நீட் தேர்வை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் பாண்டியராஜனும் ஒருவர். இந்த தேர்தலில் மீண்டும் ஆவடியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார்.

“சங்கி மாஃபியா பாண்டியராஜன்… பாஜகவின் ஊதுகுழல்” – அமைச்சரை அதிரவைத்த ஸ்டாலின்!

இரண்டு நாட்களுக்கு முன் இந்தியில் பிரச்சார நோட்டீஸ் அடித்து, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரா? இந்தி வளர்ச்சி துறை அமைச்சரா என்று வாங்கி கெட்டிக்கொண்டார். அதன்பின் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். ஆவடியில் பாண்டியராஜனுக்கு எதிராக இந்த அமைப்பு பரப்புரை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.