‘அதிமுக எதிர் கட்சியாகக் கூட வராது’ – மு.க ஸ்டாலின் விமர்சனம்!

 

‘அதிமுக எதிர் கட்சியாகக் கூட வராது’ – மு.க ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு புறம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவும் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுகவும், வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் அதிமுகவும் அதிரடியாக களமிறங்கியிருக்கின்றன. பிரச்சாரத்தின் போது, ஆளும் அரசுக்கு எதிராக மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் அதற்கு அதிமுகவினர் பதில் அளிப்பதுமாகவே நாட்கள் நகர்கின்றன.

‘அதிமுக எதிர் கட்சியாகக் கூட வராது’ – மு.க ஸ்டாலின் விமர்சனம்!

இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் கூட்டணி குறித்து, தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கூட்டணி, கட்சி உட்பூசல், வார்த்தைப் போர், அறிக்கைப் போர் என தமிழக அரசியல் களமே அனல் பறக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் மாற்றம் வர உள்ளதாக சென்னையில் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தவறாக பிரசாரம் செய்தாலும் அதிமுக எதிர் கட்சியாகக் கூட வராது என்றும் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெல்லும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.