கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து!

 

கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து!

கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பைடனும் நேரடியாக களம் கண்டனர். இந்த தேர்தலில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி கண்டுள்ளார் ஜோ பைடன். இதேபோல் அமெரிக்க துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க நாட்டின் மாட்சிமை நீங்கிய துணை அதிபராக பொறுப்பேற்று இருக்கும் திருமதி.கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள் .அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு நம் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்மணி என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் இனிய செய்தி. எல்லாருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம். மனிதர்களுக்குள் பேதம் இல்லை என்பதை போலவே,ஆண்களுக்கு சரி நிகராக பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான இடத்தை அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டிய இயக்கம்.

கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து!

அத்தகைய இயக்கத்துக்கு உங்களது வெற்றி மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவையும் ஆள தகுதி படைத்தவர் என்பதை உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்படுத்தி காட்டியுள்ளது.

உங்கள் ஆட்சிக்காலம் அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து தமிழர் நம் பாரம்பரியப் பெருமையை உலகுக்கு பறை சாற்றுவதாக அமையட்டும். தங்களது வருகையை தமிழகம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. தங்களது வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை எனது மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே, உங்களுக்கும் எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.