டேனிஷ் சித்திக் மரணம் : முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!

 

டேனிஷ் சித்திக் மரணம் : முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!

புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் மரணம் வருத்தமளிப்பதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், டேனிஷ் சித்திக்கின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. பேரிடர். படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் கோரத்தை நம்மிடம் கொண்டுவந்து காட்டியவர். எந்த வடிவத்திலுமான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என்பதை சித்திக்கின் மரணம் மீண்டும் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

டேனிஷ் சித்திக் மரணம் : முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோரதாண்டவம் ஆடிய போது கங்கைக் கரையில் நூற்றுக்கணக்கில் பிணங்கள் எரிக்கப்பட்டது. இந்தியாவின் நிலைமையை ஒரே புகைப்படத்தில் உரைக்கச் சொல்லியவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக். இவர் எடுத்த புகைப்படங்கள் பல உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது.

மும்பையை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக கந்தகாரில் தாலிபான் படைகள் முன்னேறி வருவதை நெருக்கமாக இருந்து படம்பிடித்து காட்டி வந்தார். இந்த நிலையில், இன்று காலை ஸ்பின் போட்லாக் என்ற பகுதியில் சித்திக் கொலை செய்யப்பட்டார். ஆப்கான் ராணுவம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய போது அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சித்திக் கொலை செய்யப்பட்டார். இவரது மரணம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.