குப்பைக் கொட்ட கட்டணமா? : மு.க ஸ்டாலின் கண்டனம்!

 

குப்பைக் கொட்ட கட்டணமா? : மு.க ஸ்டாலின்  கண்டனம்!

ஜனவரி 1ம் தேதி முதல் குப்பைக் கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திடக் கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வீடுகளில் மாதத்திற்கு ரூ.10 முதல் 100 வரை வசூலிக்கப்படும் என்றும் வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், அரசு அலுவலகங்களுக்கு கட்டணம் மாறுபடும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், குப்பைக் கொட்ட கட்டணம் என்ற அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும் என மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குப்பைக் கொட்ட கட்டணமா? : மு.க ஸ்டாலின்  கண்டனம்!

‘அறிவிப்பை திரும்பப்பெற உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். குப்பை கொட்ட கட்டணம் என்பதை திரும்ப பெறாவிட்டால் திமுக ஆட்சி வந்தவுடன் அது ரத்து செய்யப்படும். சென்னை மாநகராட்சி நிதி முறைகேடு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநகராட்சிக்கு புதுப்புது வரிகள் போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? ஒரு வரியை விதிக்கும் முன்பு மக்களிடம் கருத்து கேட்க வேண்டாமா? அதை விவாதிக்க வேண்டாமா? என்று அவர் தெரிவித்துள்ளார்.