‘வங்கிக்கடன் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்’ மு.க ஸ்டாலின் அறிக்கை!

 

‘வங்கிக்கடன் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்’ மு.க ஸ்டாலின் அறிக்கை!

வங்கிக்கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடைய உள்ளதால் அதனை நீடிக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘வங்கிக்கடன் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்’ மு.க ஸ்டாலின் அறிக்கை!

கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள், வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தனியார் வங்கிகளோ கடனை செலுத்தியே ஆக வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ( இன்று) பிறகு வங்கிக்கடன் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்படாது என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கடன் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘வங்கிக்கடன் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்’ மு.க ஸ்டாலின் அறிக்கை!

இந்த நிலையில் வங்கிக்கடன் செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வங்கிக் கடன் #EMI செலுத்துவதற்கான அவகாசம் ஆக-31க்கு மேல் நீட்டிக்கப்படாது என்ற தகவல், #Covid19 பாதிப்பால் தவிக்கும் தனிநபர்கள், சிறுகுறு நிறுவனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக உள்ளது! நிதி ஆதார ரத்தஓட்டம் தடைப்பட்டுள்ளதால், #EMI க்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திடுக என்றும் தமிழக நிதி நிர்வாகம் நிதி நிலைமையில் மூச்சுத் திணறி தத்தளித்துக் கொண்டிருப்பதால் ஆக்கப்பூர்வமான முறையில் உதவிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.