‘அரசு நடத்தாததால் திமுக நடத்தியது’ – ஓபிஎஸ்க்கு மு.க ஸ்டாலின் பதில்!

 

‘அரசு நடத்தாததால் திமுக நடத்தியது’ – ஓபிஎஸ்க்கு மு.க ஸ்டாலின் பதில்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். கிராம சபைக் கூட்டங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுக் கொண்டே வருவதால், மக்களின் நலன் கருதி கூட்டத்தை நடத்துவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அதிமுகவினர் விமர்சித்தனர்.

‘அரசு நடத்தாததால் திமுக நடத்தியது’ – ஓபிஎஸ்க்கு மு.க ஸ்டாலின் பதில்!

இது குறித்து பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மு.க ஸ்டாலின் என்ன காந்தியா?. மாவட்ட ஆட்சியர் தான் கூட்டத்தை நடத்த வேண்டும். ஸ்டாலின் தன்னை காந்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ்சின் விமர்சினத்துக்கு பதில் அளித்து மு.க ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘ஆண்டுக்கு 4 முறை கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டும். அரசு நடத்தாததால் திமுக கிராமசபை கூட்டம் நடத்தியது. என்ன தடை போட்டாலும் விடக்கூடாது என்றுதான் மக்கள் கிராமசபை என்ற பெயரில் நடத்தினோம்’ என்று கூறினார்.