தந்தையும் மகனும் இணைந்து நடிக்கும் “மெகா ஹிட் திரைப்படம்”!வசைப்பாடும் தோழமைகள்

 

தந்தையும் மகனும் இணைந்து நடிக்கும் “மெகா ஹிட் திரைப்படம்”!வசைப்பாடும் தோழமைகள்

சட்டமன்ற தேர்தலுக்காக விழுந்து விழுந்து பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடாதது இருவரும் சேர்ந்து நடிக்கும் நாடகம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரிசுகளுக்கு ‘சீட்’ கேட்ட திமுக சீனியர் தலைவர்களை இந்த காரணத்தை சொல்லியே புறக்கணித்து வருகிறாராம் ஸ்டாலின். திமுக என்றாலே வாரிசு அரசியல் தான். இந்த சந்ததியினருக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் வாசமே இல்லாத உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவுக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் ஆதி காலத்திலிருந்தே திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு என்ன கைமாறு செய்திருக்கிறார் ஸ்டாலின்.

தந்தையும் மகனும் இணைந்து நடிக்கும் “மெகா ஹிட் திரைப்படம்”!வசைப்பாடும் தோழமைகள்

சரி அதோடு போனுச்சுனு நினைச்சா… உதயநிதி கைகாட்டுபவர்களுக்கே கட்சியில் முக்கிய பதவி. இதனால் திமுகவிலிருக்கும் மூத்த தலைவர்களும் ஆண்டாண்டாய் உழைத்தவர்களும் அதிருப்தியில் உள்ளனர். எப்படியாவது முதல்வர் பதவியை அடைந்தே தீர வேண்டுமென ஸ்டாலின் 350 கோடி ரூபாய் கொடுத்து ஐபேக் டீமின் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தார். அவரும் உதயநிதிக்கு எந்த பதவியும் கொடுக்க வேண்டாம் என ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்தாராம். அதனையும் மீறிசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்தார் உதயநிதி. இப்படி உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பார்த்து, திமுக மூத்த நிர்வாகிகள் பலரும், தங்களது பிள்ளைகளுக்கு ‘சீட்’ கேட்டு கட்சித் தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

தந்தையும் மகனும் இணைந்து நடிக்கும் “மெகா ஹிட் திரைப்படம்”!வசைப்பாடும் தோழமைகள்

குறிப்பாக, முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண், கடலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் எம்.ஆர்.கே.பி.கதிரவன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவின் மகன் டாக்டர் கம்பன் உள்ளிட்ட பலர் தங்களது வாரிசுகளை தேர்தலில் முன்னிறுத்த விரும்பினர். இதனையெல்லாம் பார்த்து திணறிய உதயநிதி, ஸ்டாலினுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு கொடுத்த விருப்பமனுவை வாபஸ் பெற்று தான் போட்டியிடவில்லை ஒதுங்கிவிட்டார். இதெல்லாம் மூத்த தலைவர்களின் வாயை அடைக்க அப்பாவும் மகனும் சேர்ந்து நடத்திய நாடகம் என்பது பின்பே தெரிந்தது. ஆக மொத்தம் கட்சிக்குள் சலசலப்பு, கூட்டணிக்குள் சலசலப்பு… ஆனால் விளம்பரம் மட்டும் செம ஜோரா இருக்கு!