• August
    25
    Sunday

Main Area

Main



ராகுலும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் ஆறுதல்! - தமிழிசை கிண்டல்

tamilisai
tamilisai
Loading...

சென்னை: பிரதமர் வேட்பாளர் குறித்த மு.க.ஸ்டாலினின் பேச்சை, அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே ரசிக்கவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பொதுக்கூட்ட வடிவில் நடைபெற்ற அந்த விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அந்த விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்றும், அவரை முன்னிறுத்தித் தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் பேசியிருந்தார்.

mk stalin

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு, அகிலேஷ் யாதவ், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தேர்தல் நடைபெற்ற பின்னரே பிரதமர் குறித்து ஆலோசிக்க வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

tamilisai

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை அவர்களின் கூட்டணி கட்சியினரே ரசிக்கவில்லை. இது தான் அவர்களின் கூட்டணி. மேடையில் இருந்த சந்திரபாபு நாயுடுவும் இதை ரசிக்கவில்லை. 

ராகுலை பிரதமராக ஏற்க அவர்களே தயாராக இல்லை. காங்கிரஸும், திமுகவும் ஒருவருக்கொருவர் நீங்கள் தான் பிரதமர், நீங்கள் தான் முதல்வர் என ஆறுதல் கூறிக் கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.