பிரதமரிடம் முதல்வர் கேட்ட GST பாக்கி!

 

பிரதமரிடம் முதல்வர் கேட்ட GST பாக்கி!

நிலுவையில் உள்ள தமிழகத்துக்கான ஜிஎஸ்டி வரியை வழங்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதமரிடம் முதல்வர் கேட்ட GST பாக்கி!

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். அதில், “ஜிஎஸ்டி நிலுவையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், கூடுதலாக தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்,புதிய மின்சார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களோடு கலந்துபேசி நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெர்வித்தார்.