“வியூகம் வகுப்பதில் கருணாநிதியை விஞ்சிய “சாணக்கியர்” ஸ்டாலின்”

 

“வியூகம் வகுப்பதில் கருணாநிதியை விஞ்சிய “சாணக்கியர்” ஸ்டாலின்”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து விட்டது. தற்போது அந்தந்த துறைகளின் மீதான மானைய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இச்சூழலில் இன்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் பேரவையில் பேசியபோது, “தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெற காரணமாக இருந்தவர்கள் நான்கு தலைவர்கள். அவர்கள் பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கருணாநிதி.

“வியூகம் வகுப்பதில் கருணாநிதியை விஞ்சிய “சாணக்கியர்” ஸ்டாலின்”

இவர்கள் நால்வரையும் தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் நன்றியோடு நினைவுகூற வேண்டும். நவீன தமிழகத்துக்கு அடித்தளமிட்டவர்கள் இவர்கள்தான். திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி என்பது ஒரு கொள்கைக் கூட்டணி. அதற்கு நோக்கம் உண்டு. அந்த வகையில் தான் அந்த கூட்டணியை தமிழக மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். 2019 மக்களவை தேர்தலில், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டவர் திமுக தலைவரான இன்றைய முதல்வர். அன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த கூட்டத்துக்கான அழைப்பிதழில் சோனியா காந்தி பெயர் மட்டும் தான் இருந்தது.

“வியூகம் வகுப்பதில் கருணாநிதியை விஞ்சிய “சாணக்கியர்” ஸ்டாலின்”
ராஜேஷ்குமார்

அந்தக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில் அவரை வரவழைத்து, அவர் முன்பாக அவரை பிரதமர் வேட்பாளராக பிரகடனம் செய்த முதல்வரை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறார்கள். அவரின் தொலைநோக்கு பார்வையின் காரணமாகத் தான் 38 இடங்களிலும் மகத்தான வெற்றியை பெற்று பாஜகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற நிலையை ஏற்படுத்திய பெருமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உண்டு. வியூகம் வகுப்பதில் கருணாநிதி ஒரு சாணக்கியர். அவரையும் மிஞ்சுகிற வகையில் உங்களது வியூகம் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.