மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெறும் மு.க.ஸ்டாலின் !

 

மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெறும் மு.க.ஸ்டாலின் !

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது திமுக. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் உதயசூரியன் உதிப்பது, கட்சித் தொண்டர்களை பேரானந்தம் அடைய செய்துள்ளது. சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் முதல்வராக அரியணை ஏறும் ஸ்டாலினுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.

மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெறும் மு.க.ஸ்டாலின் !

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றியதும், கட்சியின் முழு பொறுப்பையும் கையிலெடுத்தார் ஸ்டாலின். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றார். கருணாநிதி மறைந்த தினம், ஸ்டாலின் பட்ட துயரம் சொல்லிலடங்கா. தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற நீதிமன்றம் வரை சென்றார். நீதிமன்றத்தின் அனுமதியுடன் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்தார்.

மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெறும் மு.க.ஸ்டாலின் !

கருணாநிதியின் மறைவுக்கு கிடைத்தபிறகு திமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தான். போட்டியிட்ட 39 இடங்களில், 38 இடங்களை கைப்பற்றியது திமுக கூட்டணி. அதே போன்ற சம்பவம் தான், சட்டமன்றத் தேர்தலிலும் நடந்தது. போட்டியிட்ட 234 தொகுதிகளில், 159 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது திமுக.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று வருகிறார். அந்த வகையில், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் துரைமுருகன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் சென்றனர்.