‘ஓட்டு போட்டு’ பங்களிப்பை தந்த மு.க.அழகிரி

 

‘ஓட்டு போட்டு’ பங்களிப்பை தந்த மு.க.அழகிரி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் உற்று நோக்கப்பட்ட 3 பேர் சசிகலா, ரஜினிகாந்த் மற்றும் மு.க.அழகிரி என்றால் அது மிகையாகாது. ரஜினியின் அரசியல் பிரவேசம், சசிகலாவின் ரீ என்ட்ரி, மு.க.அழகிரி புதிய கட்சி தொடக்கம் ஆகிய மூன்றும் அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரியும் அதிமுகவுக்கு எதிராக சசிகலாவும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு பேருமே பின்வாங்கிவிட்டனர். ரஜினிகாந்த்தும் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் பயணத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

‘ஓட்டு போட்டு’ பங்களிப்பை தந்த மு.க.அழகிரி

புதிய கட்சியைத் தொடங்குவதற்காக மதுரையில் ஒரு மாபெரும் கூட்டத்தை கூட்டிய மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிய கட்சி தொடங்க தொண்டர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லையாம். அதனால் தான் அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாக கூறப்பட்டது. அக்கூட்டத்திற்கு பிறகு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்த அழகிரி, கட்சி தொடங்கவில்லை என்றாலும் ‘தேர்தலில் என்னுடைய பங்களிப்பு’ இருக்குமென தெரிவித்திருந்தார்.

‘ஓட்டு போட்டு’ பங்களிப்பை தந்த மு.க.அழகிரி

இந்த நிலையில், மதுரை டி.வி.எஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். தேர்தலில் எனது பங்களிப்பு இருக்குமென அழகிரி சொன்னது ஓட்டு போடுவதைத் தான் போல..!