ஸ்டாலின் முதல்வராக முடியாது; எனது ஆதரவாளர்கள் முதல்வராக விடமாட்டார்கள்- முக. அழகிரி

 

ஸ்டாலின் முதல்வராக முடியாது; எனது ஆதரவாளர்கள் முதல்வராக விடமாட்டார்கள்- முக. அழகிரி

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தொண்டர்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டபோது என்னை நீங்கள் சிறப்பாக பணியாற்றி என்னை வெற்றி பெறச் செய்தார்கள். எனக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கும் போது கூட எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் நான் கூறினேன். உதயசூரியன் சின்னத்தில் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நான்தான் முதல் வெற்றி வேட்பாளராக வெற்றி பெற்றேன். நான் தென்மண்டல பொறுப்பாளராக இருந்ததால் பொறாமையில் ஸ்டாலின் பொருளாளர் பதவியை பெற்றார். என் வீட்டிற்கு ஸ்டாலின் வந்தபோது நீ தான் இனிமேல் எனக்கு எல்லாம், அடுத்த தலைவரும் நீ தான் அடுத்த முதல்வர் நீதான் என சொன்னேன். பின்னர் ஏன் எனக்கு ஸ்டாலின் துரோகம் செய்தார் என தெரியவில்லை

ஸ்டாலின் முதல்வராக முடியாது; எனது ஆதரவாளர்கள் முதல்வராக விடமாட்டார்கள்- முக. அழகிரி

கலைஞர் முக. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாமா? என என்னிடம் கேட்டபோது தாராளமாகக் கொடுக்கலாம் என நான் சொன்னேன். எதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்? நான் என்ன தவறு செய்தேன்? என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு நான் அந்த அளவிற்கு என்ன தவறு செய்தேன் என திமுகவிலிருந்து என்னிடம் பேசிய நண்பரிடம் நானே கேட்டுள்ளேன். வருங்கால முதல்வரே என எனக்கு போஸ்டர் ஒட்டப்படுகிறது நிச்சயமாக அது நடக்காது. நான் முதல்வராக ஆசைப்படவில்லை. ஆனால் மு க ஸ்டாலினை எனது ஆதரவாளர்கள் முதல்வராக விடமாட்டார்கள். மு க ஸ்டாலின் முதல்வராக முடியாது.

ஸ்டாலின் முதல்வராக முடியாது; எனது ஆதரவாளர்கள் முதல்வராக விடமாட்டார்கள்- முக. அழகிரி

திமுகவில் என்னை சேர்த்துக் கொள்வீர்களா என மறைந்த தலைவர் கலைஞரை சந்தித்து நான் கேட்டபோது தற்போது ஆடுபவர்களின் ஆட்டம் அடங்கட்டும் என கூறியிருந்தார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக மறைந்துவிட்டார். நான் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருந்தாலும் கெட்ட முடிவாக இருந்தாலும் சரி, எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் விரைவில் முடிவை அறிவிப்பேன். கலைஞருடைய திறமைக்கு நிகர் உலகத்தில் வேறு யாரும் கிடையாது. அப்படி வருவதற்கு இனி பிறக்க வேண்டும். கலைஞரை மறந்து திமுக கட்சி நடத்துகிறது

கட்சிக்காக நான் எவ்வளவோ நன்மைகள் செய்து உள்ளேன் எத்தனையோ பேரை அமைச்சர்களாக நான் ஆகிவிட்டிருக்கின்றேன், கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன், கால தாமதம் ஏற்படலாம் விரைவில் ஆரம்பிக்கலாம், ஆரம்பிக்காமலும் இருக்கலாம் எதையும் தாங்கும் இதயம் ஆக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.