திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை!

 

திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை!

திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு அவரது ஆதரவாளர் திமுக உறுப்பினர் அட்டை வழங்கிய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தொடங்கி வைத்தார். “எல்லோரும் நம்முடன்” என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்து கொள்ளும்படியும் கோரிக்கை விடுத்தார். அதன்படி திமுகவில் இணைய விரும்புபவர்களுக்கான இணையதள முகவரியும் அறிமுகம் செய்யப்பட்டன. திமுகவில் இணைய விரும்புபவர்கள் https://www.dmk.in/joindmk/ என்ற இணையதளத்தில் பெயர், முகவரி, ஈமெயில் முகவரி, வாக்காளர் அட்டை, வாட்ஸ்அப் விவரங்களை கொடுத்தால் திமுகவில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆன்லைனில் யாரை வேண்டுமானாலும் திமுக உறுப்பினராகலாம்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை!

இந்நிலையில் ஆன்லைனில் ஆட்டோ ஜெனரேட் முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் திமுகவில் சேர்ந்ததாகவும், அவர்களுக்கான உறுப்பினர் அட்டைகளும் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாகர் கோவிலை சேர்ந்த திமுக முன்னாள் பிரமுகர் கபிலன் என்பவர் ஆன்லைனில் விண்ணப்பித்து மு. க. அழகிரியை திமுக உறுப்பினராக்கியுள்ளார். ஆட்டோ ஜெனரேட் முறையில் அடையாளர் அட்டை வழங்கப்படுவதால் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது கூட தெரியாமல் அவருக்கும் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் எண் வழங்கப்பட்டது.