மு.க அழகிரியின் புதிய கட்சி பெயர் ‘கலைஞர் திமுக’?: மதுரையில் அனல்பறக்கும் போஸ்டர்கள்!

மு.க அழகிரியின் புதிய கட்சி பெயர் ‘கலைஞர் திமுக’?: மதுரையில் அனல்பறக்கும் போஸ்டர்கள்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி புதிய கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான, மு.க அழகிரி கடந்த 2014ம் ஆண்டு தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு, அரசியலில் ஈடுபாடு காட்டாமல் விலகியே இருந்தார். இதனிடையே இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக மு.க அழகிரி சூசகமாக தெரிவித்தும், திமுக அதனை பொருட்படுத்தவில்லை.

மு.க அழகிரியின் புதிய கட்சி பெயர் ‘கலைஞர் திமுக’?: மதுரையில் அனல்பறக்கும் போஸ்டர்கள்!

அதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என கடந்த வாரம் மு.க அழகிரி தெரிவித்தார். அவர் புதிய கட்சி தொடங்குகிறாரா? அல்லது திமுகவில் மீண்டும் இணைகிறாரா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இது குறித்து ஆலோசிக்க, மதுரை துவாரகா பேலஸில் ஆலோசனைக் கூட்டத் ஏற்பாடு செய்திருக்கிறார். அக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மு.க அழகிரியின் புதிய கட்சி பெயர் ‘கலைஞர் திமுக’?: மதுரையில் அனல்பறக்கும் போஸ்டர்கள்!

இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில், அழகிரியை ஆதரித்து மதுரையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மு.க அழகிரி கட்சி தொடங்கினால், அவரது தந்தையின் பெயரை நினைவு கூறும் வகையில் கட்சிப் பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. அதாவது, “கலைஞர் திமுக” என்று பெயர் வைக்க உள்ளதாக தெரிகிறது.