மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பீடு செய்ததுடன், கோவிட்-19 நிலவரத்தையும் ஆய்வு செய்தார்.

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.
அன்று காலையில் நகூர் கிராமத்தை சேர்ந்த 38 வயதான சி லால் மங்கைஹ்சங்கி என்ற கர்ப்பிணி பெண் சம்பாய் மாவட்ட மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனை டாக்டர் உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறையில் இருப்பதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணை சம்பாயில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தியம்சங்கா தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

உடனே எம்.எல்.ஏ. தியம்சங்காவும் உடனடியாக அந்த மருத்துவனைக்கு சென்றார். கர்ப்பிணி பெண்ணுக்கு உடனடியாக சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தார். இதனால் தாய் மற்றும் சேயின் உயிர் காப்பாற்றப்பட்டது. எம்.எல்.ஏ. தியம்சங்காவின் அந்த செயல் மனிதாபிமான சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டு.