மிதாலி ராஜ் vs ஹர்மன்பிரீத் கவுர் – WomensT20

 

மிதாலி ராஜ் vs ஹர்மன்பிரீத் கவுர் – WomensT20

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டின் WomensT20Challenge இன்று தொடங்குகிறது. பெண்கள் கிரிக்கெட்டுக்கான மினி ஐபில் போல
WomensT20Challenge. இந்தத் தொடரில் சூப்பர் நோவாஸ், டிரெயில் ப்ளேயர்ஸ், வெலாஸிட்டி ஆகிய மூன்று அணிகள் ஆடுகின்றன.

இந்த மூன்று அணிகளும், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு இருமுறை மோதும். அதில் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு இரு அணிகள் தேர்வாகும். அதில் வெல்லும் அணியே இந்தத் தொடரின் சாம்பியன்.

மிதாலி ராஜ் vs ஹர்மன்பிரீத் கவுர் – WomensT20

வெலாஸிட்டி அணிக்கு கேப்டன் மிதாலி ராஜ். சூப்பர் நோவாஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்.

இன்றைய போட்டி வெலாஸிட்டி டீம் vs சூப்பர் நோவாஸ் டீம். மிதாலி ராஜ் கேப்டனாக இருக்கும் வெலாஸிட்டி டீமில் உதவி கேப்டன் வேதா கிருஷ்ணமூர்த்தி, மேகனா சிங், ஜஹண்ட்ரா ஆலம், மனாலி தக்‌ஷினி, சுஷ்ஸ்ரீ உள்ளிட்டோர் ஆடுகின்றனர்.

மிதாலி ராஜ் vs ஹர்மன்பிரீத் கவுர் - WomensT20

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக ஆடும் சூப்பர் நோவாஸ் அணியின் உதவி கேப்டன் ஜெமிமா. தன்யா, சார்மதி, அனுஷா பட்டீல், பூனம் யாதவ், ப்ரியா புன்யா, அருந்ததி ரெட்டி உள்ளிட்டோர் ஆடுகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகள் பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் WomensT20Challenge போட்டிகளையும் பார்க்கத் தொடங்கினால் பெண்கள் கிரிக்கெட்டுக்கான புகழும் அதிகரிக்கும்.