’வன்னியர் இடஒதுக்கீட்டில் கலைஞர் செய்த சூழ்ச்சி’ மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு – ஓர் அலசல்

 

’வன்னியர் இடஒதுக்கீட்டில் கலைஞர் செய்த சூழ்ச்சி’ மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு – ஓர் அலசல்

இந்தியாவிலேயே அதிக சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டவர் எனும் பிரிவு சேர்ந்ததே காரணம். இதற்கான போராட்டத்தை முன்னெடுத்தது பாமக.

1987 -ல் பாமக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் முக்கியக் கோரிக்கை ‘வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு’. அப்போது தமிழ்நாட்டின் முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தக் கோரிக்கையை அவர் ஏற்றதாகத் தெரிவில்லை. அதனால், போராட்டம் இன்னும் தீவிரமானது.

’வன்னியர் இடஒதுக்கீட்டில் கலைஞர் செய்த சூழ்ச்சி’ மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு – ஓர் அலசல்

எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு உத்தரவின் பெயரில் போராடிய வன்னியர்கள் 21 பேர் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன்பின் ஆட்சி மாறியது. திமுக தலைமையிலான ஆட்சியில் வன்னியர்களுக்கு என்று இடஒதுக்கீடு அளிக்காமல், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு என 100க்கும் மேற்பட்ட சாதிகளை உள்ளடக்கி தரப்பட்டது.

பாமக நிறுவனத் தலைவர் ச.ராமதாஸ் இதைத்தான் தற்போது குற்றச்சாட்டாக முன் வைக்கிறார். ”21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார்.

நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார்” என்று பதிவிட்டு உள்ளார்.

’வன்னியர் இடஒதுக்கீட்டில் கலைஞர் செய்த சூழ்ச்சி’ மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு – ஓர் அலசல்

இந்தக் குற்றச்சாட்டை இப்போது மட்டுமல்ல, திமுகவுடன் கூட்டணி இல்லாத நேரங்களில் எல்லாம் ராமதாஸ் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவ்வளவு கடுமையான குற்றசாட்டை கலைஞர் மீது வைப்பவர் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்து மத்தியில் அமைச்சரவையிலும் இடம்பெற தவறவில்லை.

சென்ற பாராளுமன்ற தேர்தலோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதில் அதிமுக – திமுக இரண்டும் போட்டியிட்டன. அது வன்னியர்கள் அதிகம் வாழும் தொகுதி. அதனால், பாமக தன்னுடன் இருப்பதால் வெற்றி நிச்சயம் என்று நம்பியது.

அந்த நேரத்தில்தான் மு.க.ஸ்டாலின் ‘அடுத்த திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். உடனே அதற்கு பதிலடியாக பாமக வில் ‘இப்போது கூறும் அதே குற்றசாட்டு கூறப்பட்டது. மேலும், ஏ.கோவிந்தசாமி மகனுக்கு போட்டியிட திமுக வாய்ப்பு அளிக்க வில்லை” என்றும் கூறியது.

’வன்னியர் இடஒதுக்கீட்டில் கலைஞர் செய்த சூழ்ச்சி’ மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு – ஓர் அலசல்

தேர்தல் முடிவில் அதிமுக வென்றது. 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் 35 சதவிகிதம். அதிமுக 31 சதவிகிதம் வாக்குகள் பெற்றன. பாமக 23 சதவிகிதம் பெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக வாக்கு சதவிகிதம் சற்று அதிகரித்து 36 சதவிகிதமானது. ஆனால், பாமக வாக்குகள் அதிமுகவுக்குச் சென்றதும் அதிமுக 60 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

கலைஞர் மீது ராமதாஸ் இந்தக் குற்றசாட்டை தொடர்ந்து வைத்தே வருகிறார். எம்.ஜி.ஆர் வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் அதை நிறைவேற்றுவதற்கு இறந்துவிட்டதாகவும் சொல்வார். இதெல்லாம் அதிமுக கூட்டணியில் இருக்கும்போதுதான்.

திமுக தரப்பிலோ, இடஒதுக்கீடு போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நிதியுதவி, பென்ஷன், வன்னியர்களுக்கான வாரியம் அமைக்கப்பட்டதெல்லாம் திமுக ஆட்சியில்தான் என்று சொல்லப்படும்.

இரு தரப்பிலும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் நினைவுக்கு வந்தால் அருகில் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.