குடும்பம் நடத்த சம்பளம் காணவில்லை – கண்ணீர் வடிக்கும் பிரதமர்

 

குடும்பம் நடத்த சம்பளம் காணவில்லை – கண்ணீர் வடிக்கும் பிரதமர்

தற்போது பெற்று வரும் ஊதியம் குடும்பம் நடத்த போதவில்லை” என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேதனையில் உள்ளார். எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என இங்கிலாந்தின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.பி.க்கள் 2 பேர் அளித்த தகவலின் பேரில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பம் நடத்த சம்பளம் காணவில்லை – கண்ணீர் வடிக்கும் பிரதமர்


போரிஸ் ஜான்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி வந்தார்.அப்போது அவர் மாதம் ரூ.21 லட்சத்து 91 ஆயிரம் ஊதியமாக பெற்று வந்தார்ரிதன் பின்னர் டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்பு வரை போரிஸ் ஜான்சன், இந்திய மதிப்பில் ரூ.2 கோடியே 61 லட்சத்து 93 ஆயிரம் ஆண்டு வருமானமாக பெற்று வந்துள்ளார். பின்னர் மாதத்துக்கு 2 மேடைப்பேச்சுக்கு சுமார் ரூ.1 கோடியே 52 லட்சத்து 44 ஆயிரம் வருவாயாக ஈட்டினார். அவர் இங்கிலாந்து பிரதமராகிய தற்போதைய நிலையில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரம் ஊதியமாக பெற்று வருகிறார்.
போரிஸ் ஜான்சனுக்கு மொத்தம் 6 குழந்தைகள், அவர்களுக்கு தேவையான செலவுகளை இவர்தான் கவனித்து வருகிறார். இது தவிர விவாகரத்தான அவரது முன்னாள் மனைவி மரினா வீலருக்கு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்து வருகிறார். தற்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்பதால் அடுத்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குடும்பம் நடத்த சம்பளம் காணவில்லை – கண்ணீர் வடிக்கும் பிரதமர்