தந்தைக்கு கடிதம் எழுதிவிட்டு மாயமான காவலர்… சென்னை போலீசில் ஆஜர்…

 

தந்தைக்கு கடிதம் எழுதிவிட்டு மாயமான காவலர்… சென்னை போலீசில் ஆஜர்…

கன்னியாகுமரியில் குடும்ப தகராறில் தந்தைக்கு உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான காவலர், சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகினார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த பர்ணபஸ் என்பவரது மகன் ஜெனிகுமார் (36). இவர் சென்னை பூக்கடை போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜாக்குலின் ஷீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜாக்குலின் ஷீபா கன்னியாகுமரி நட்டாலம் பகுதியில் உள்ள தனது தயார் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி குடும்பத்தினரை காண்பதாக கூறி சென்ற ஜெனிக்குமார் திடீரென மாயமாகினார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் விசாரித்த போது, அவர் வீட்டில் தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

தந்தைக்கு கடிதம் எழுதிவிட்டு மாயமான காவலர்… சென்னை போலீசில் ஆஜர்…

இதில், சொத்துக்களை எழுதித்தரக் கோரி, தன்னை மனைவி மற்றும் அவரது உறவினர்கள் செருப்பால் அடித்ததாகவும், இதனால் வாழ்க்கையை முடித்துக் கெள்வதாகவும் கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் போலீசார் மாயமான அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ஜெனிகுமார் நேற்று திடீரென சென்னையில் உள்ள அவரது காவல் நிலையில் மீண்டும் ஆஜராகினார். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப வாழ்வில் நிம்மதி இல்லாததால், நிம்மதி தேடி கோயில்களுக்கு சென்றதாகவும், மேலும் தனது மனைவியுடனான தகராறால் குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.