காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

 

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திண்டுக்கல்

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு மணி நேரத்திற்குள் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 21 வயதுடைய பெண் ஒருவர், நேற்றிரவு வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் மிகுந்த வேதனையில் இருந்து வந்தனர்.

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

இந்த நிலையில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த இளம்பெண் ஒருவரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் அழைத்து விசாரித்தார். இதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்த நிலையில், அவர் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் உடனடியாக சார்பு ஆய்வாளர் ஜான்சன் அந்த பெண்ணின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவரது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் பெண்ணை ஒப்படைத்தனர். தங்களது பெண் மாயமானதால் வேதனையில் இருந்த பெற்றோருக்கு, ஒரு மணி நேரத்தில் அவரை மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு, அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.