`மகள் திடீர் மாயம்; கண்ணீருடன் தவித்த தந்தை!’- 24 மணி நேரத்தில் அசத்திய இளைஞர்கள்

 

`மகள் திடீர் மாயம்; கண்ணீருடன் தவித்த தந்தை!’- 24 மணி நேரத்தில் அசத்திய இளைஞர்கள்

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுமியை 24 மணி நேரத்தில் இளைஞர்கள் சிலர் பத்திரமாக மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். சிறுமியை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

`மகள் திடீர் மாயம்; கண்ணீருடன் தவித்த தந்தை!’- 24 மணி நேரத்தில் அசத்திய இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடியை சேர்ந்தவர் பாபு. இவர் தனது 8 வயது மகள் நாடியம்மாளுடன் பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை வாசலில் மகளை நிற்க வைத்துவிட்டு கழிவறைக்குள் சென்றுள்ளார் பாபு. பின்னர் வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு, மகளை பல இடங்களில்தேடியுள்ளார். மகள் கிடைக்கவில்லை. இதனால் பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் பாபு தவித்துக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த இளைஞர்கள் விக்னேஷ், பக்ரூதின், அஜித் ஆகியோர் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்த பாபுவிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தனது மகள் காணாமல் போய்விட்டால் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பாபுவை காவல்நிலையம் அழைத்துச் சென்று இளைஞர்கள் புகார் அளித்தனர். பின்னர், இளைஞர்கள், மாயமான சிறுமியை தேட ஆரம்பித்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை இளைஞர்கள் ஆய்வு செய்தனர்.

`மகள் திடீர் மாயம்; கண்ணீருடன் தவித்த தந்தை!’- 24 மணி நேரத்தில் அசத்திய இளைஞர்கள்

அப்போது, ஒரு நபர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சமூகவலைதளங்களின் உதவியுடன் அந்த நபரை கண்டுபிடித்த இளைஞர்கள், அவரை பிடித்து விசாரித்துள்ளனர். முத்துப்பேட்டை அருகே உள்ள நறுமணஞ்சேரி கிராமத்தில் இருந்த சிறுமியை மீட்டு தந்தை பாபுவிடம் ஒப்படைத்தனர். சிறுமியை அழைத்து சென்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுமியை 24 மணி நேரத்தில் மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.