CSK டீமில் முக்கிய வீரர் இரண்டு வாரம் மிஸ்ஸிங்! யார்… ஏன்?

ஐபிஎல் ஃபீவர் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி விட்டது. ஊடகங்களில் மட்டுமல்ல, நண்பர்கள் பேச்சிலும் ஐபிஎல் தகவல்களே பரிமாறப்படுகின்றன.

கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் மேட்ச், ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதிதான் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

CSK டீமில் முக்கிய வீரர் இரண்டு வாரம் மிஸ்ஸிங்! யார்… ஏன்?
PC:Twitter

இந்த ஆண்டும் ’தல’ தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் உற்சாகமாக களத்தில் இறங்குகிறது.

இதற்காக, தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் ஐந்து நாள்கள் சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். அடுத்து உத்வேகத்துடன் ஐக்கிய அமீரகத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

ஜடேஜா பயிற்சிக்கு வரவில்லை என்றாலும் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்றுவிட்டார். இப்படி ஒவ்வோர் அணியிலும் வீரர்கள் போட்டி நடக்கும் நாட்டிற்கு புறப்பட்டு விட்டனர்.

CSK டீமில் முக்கிய வீரர் இரண்டு வாரம் மிஸ்ஸிங்! யார்… ஏன்?
jedaja and imran thakir PC:Twitter

CSK டீமின் பவுலர் இம்ரான் தாகூர், ரஜினி வசனத்தோடு உற்சாகமாக ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், இம்ரான் தாகூரோடு ஜோடி சேர்ந்து பவுலிங்கில் அசத்தும் ஹர்பஜன் சிங் மட்டும் ஆப்செண்ட் ஆகி விட்டாராம்.

தோனியில் அன்புக்குரிய பவுலர் ஹர்பஜன் சிங். மேலும் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் மைதானங்களில் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாகச் சொல்லப்படுகிறது.

CSK டீமில் முக்கிய வீரர் இரண்டு வாரம் மிஸ்ஸிங்! யார்… ஏன்?
PC:Twitter

இந்நிலையில் ஹர்பஜன் சிங் மிஸ்ஸானது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஹர்பஜன் சிங்கின் அம்மாவுக்கு தற்போது உடல்நிலை சரியில்லையாம். அவரைக் கவனித்துக்கொள்ள அவர் இந்தியாவில் இருக்க வேண்டுமாம். ஓரிரு வாரங்கள் கழித்து CSK டீமில் இணைந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

  • CSK டீமில் முக்கிய வீரர் இரண்டு வாரம் மிஸ்ஸிங்! யார்… ஏன்?

  • CSK டீமில் முக்கிய வீரர் இரண்டு வாரம் மிஸ்ஸிங்! யார்... ஏன்?