பெட்ரோல் விலை உயரவே இல்லை…நம்புங்க மக்களே – கணக்கு போட்டுச் சொல்லும் அமைச்சர்!

 

பெட்ரோல் விலை உயரவே இல்லை…நம்புங்க மக்களே – கணக்கு போட்டுச் சொல்லும் அமைச்சர்!

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பெட்ரோல் விலை விண்ணை முட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே பெட்ரோல் விலையின் மூலம் நாட்டு மக்களைச் சுரண்டுகிறது என விமர்சித்தார். அவர் தொடர்ச்சியாக இவ்விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாகச் சாடிவருகிறார். இச்சூழலில் பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே செல்வதாகக் கூறுவது தவறான செயல் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை உயரவே இல்லை…நம்புங்க மக்களே – கணக்கு போட்டுச் சொல்லும் அமைச்சர்!

ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபாலின் பெட்ரோல் விலை குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், “பெட்ரோல், டீசல் மீது வரி விதிப்பதில் மத்திய அரசு மிகக் கவனமாகச் செயல்பட்டுவருகிறது. கடந்த 300 நாள்களில் 60 நாட்கள் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. தவிர, பெட்ரோல் விலை 7 முறையும், டீசல் விலை 21 முறையும் விலை குறைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 250 நாட்களில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது. ஆகவே, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதாகப் பொய் பிரச்சாரம் செய்வது மிகவும் தவறான செயல்” என்று தெரிவித்தார்.