பாகற்காயின் அசத்தல் பலன்கள்!

 

பாகற்காயின் அசத்தல் பலன்கள்!

உணவு சாம்ராஜ்யத்தில் மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளுள் ஒன்று பாகற்காய். பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடலாம். ஜூஸ்ஸாக அருந்தலாம். ஊறுகாய் போட்டும் பயன்படுத்தலாம். 100 கிராம் பாகற்காயில் வெறும் 19 கலோரிதான் உள்ளது. 3.5 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2.4 கிராம் அளவுக்கு நார்ச்சத்தும் உள்ளது. பாகற்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம், ஃபோலேட், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

பாகற்காயின் அசத்தல் பலன்கள்!

பாகற்காயில் உள்ள ரசாயனங்கள் இன்சுலின் போன்று செயல்படும் தன்மை கொண்டது. அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் எடுத்துக்கொள்ளப் பலரும் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காய் டைப் 1, டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மாத்திரை மருந்து எடுத்து வருபவர்கள் பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மாத்திரை மருந்து தேவை குறையும்.

இதில் வைட்டமின் ஏ, சி உள்ளதால் சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு துணை புரிகிறது. இது வயோதிகத்தைத் தாமதப்படுத்துகிறது. முகப்பருக்கள், சுருக்கம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. சொரியாசிஸ், படர்தாமரை போன்ற சரும தொற்று வியாதிகளை சரி செய்கிறது. பாகற்காயை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு, முடி உதிர்வு, முடி பிளவுபடுதல் போன்ற பிரச்னைகளை போக்குகிறது.

பாகற்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இது கல்லீரிலில் சுரக்கும் என்சைம்களை தூண்டி கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கல்லீரல் மட்டுமின்றி சிறுநீர்ப்பை, செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது.

செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதய நோய், பக்கவாதத்துக்கான வாய்ப்பை குறைக்கிறது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினசரி உணவில் பாகற்காயை சேர்த்துக்கொள்வது நல்லது. குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து கொண்டது. இதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்பு வேகமாக கரையும். உடலின் வளர்சிதை மாற்றப் பணி விகிதம் அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் கொழுப்பைக் கரைப்பதில் துணை புரியும்.

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து பாகற்காயை சாப்பிட்டு வந்தால் அது சருமத்துக்கு பொலிவு தரும். புற்றுநோய் செல்களை அழிக்கும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.