சிறுபான்மையினர் நலன்: மத்திய அரசின் 57 திட்டங்களை செயல்படுத்தும் தமிழகம்!

 

சிறுபான்மையினர் நலன்: மத்திய அரசின் 57 திட்டங்களை செயல்படுத்தும் தமிழகம்!

மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் 57 திட்டங்களை ரூ.42 கோடியில் தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரதமரின் ஜன்விகாஸ் காரியக்கிராம் என்ற திட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் வளர்ச்சித் திட்டங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு 60 சதவிகித நிதியையும் மாநில அரசு 40

சிறுபான்மையினர் நலன்: மத்திய அரசின் 57 திட்டங்களை செயல்படுத்தும் தமிழகம்!

சதவிகித நிதியையும் ஒதுக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 57 பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்காக தமிழக அரசு தன் பங்குக்கு 7.27 கோடி ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஆணையை தமிழக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர் பி.சந்திரமவுலி வெளியிட்டுள்ளார். மொத்தம் ரூ.24.25 கோடி மதிப்பில் கோவை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி, கரூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 57 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அங்கன்வாடி கட்டிம், சுகாதார நிலையம், மீன் உளர்த்தும் வளாகம் போன்றைவை இந்த நிதி உதவியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் 262 திட்டங்கள் ரூ.276 கோடி செலவில் மேற்கொள்வதற்கான பரிந்துரையை தமிழக அரசு மத்திய

சிறுபான்மையினர் நலன்: மத்திய அரசின் 57 திட்டங்களை செயல்படுத்தும் தமிழகம்!சிறுபான்மையினர் நலத்துறைக்கு அனுப்பியிருந்தது. இது தொடர்பாக நடந்த 25வது ஆலோசனைக் கூட்டத்தில் 57 திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர் சந்திரமவுலி கூறுகையில், “தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ.18 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறையின் ஒப்புதல் கிடைத்துவிடும். இதன் மூலம் மொத்தம் 42 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டில் கரூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் ஒன்றும், வேலூரில் நோயாளிகள் கூடமும் கட்டப்பட உள்ளது” என்றார்.