• February
    24
    Monday

Main Area

Main



கல்யாணத்துக்கு போன சிறுமி கத்திமுனையில் கற்பழிப்பு -விருந்து சாப்பிடவந்தவரின் வெறிச்செயல்

Representative Image
Representative Image

ஹரியானாவின் சஃபிடோனில் ஒரு கல்யாண மண்டபத்துக்கு அருகிலுள்ள வயல்வெளியில் ஒருவர் கத்திமுனையில் 8 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்தார். கிடைத்த தகவல்களின்படி, மாணவி சம்பவம் நடந்த இரவு  மண்டபத்தில்  நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தார், அங்கு  ஒரு நபர் பணம் கொடுப்பதற்காக  அப்பெண்ணை   அருகில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார் .மேலும் அந்த நபர் இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும், 20 ரூபாய் பணம்  கொடுத்து அவளை விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.

 வேதனைக்குள்ளான மாணவி தனது குடும்பத்தினரிடம் இதைப் பற்றி கூறினார், அதிர்ச்சியடைந்த  அவர்கள் அந்த நபரைத் தேடத் தொடங்கினர், ஆனால் அவர் அந்த பகுதியில் எங்குமே காணாததால், மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார் .

பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கான நடைமுறை தொடங்கப்பட்டு, விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறினர் .

2018 TopTamilNews. All rights reserved.