திருச்சியில் 11ம் வகுப்பு மாணவியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை – இலங்கை அகதியுடன் பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கதி !!

திருச்சி கே.கே.நகர் பகுதியில் 11 ஆம் வகுப்பு மாணவியுடன் நட்பாக பழகிவந்த நபர் அவரை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

19 வயதான இலங்கை அகதி ஜி கிஷாந்த் என்பவர் திருச்சி கே.கே.நகரில் ஒரு சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை புதன்கிழமை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் திருச்சி மாவட்டம் வலவந்தன்கோட்டையில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை தனது மொபைல் போனில் தனது படங்களை அனுப்பும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அதை வைத்து மிரட்டி அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், திருச்சி கண்டோன்மென்டில் உள்ள அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி பிளாக் மெயில் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாயன்று, உதயன்பட்டியில் உள்ள பழைய ரயில் நிலையத்தில் தன்னைச் சந்திக்கும்படி அந்தப் பெண்ணிடம் கிஷாந்த் கேட்டுள்ளார். இதையடுத்து இந்த தகவலை பெற்றோருக்கு தெரிவிக்க அவர்கள் போலீசை அணுகினர். பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரியின் புகாரின் பின்னர் போலீசார் விரைவாக செயல்பட்டனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டில் கிஷாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...