சிறுமி பாலியல் பலாத்காரம்… கழுத்தை நெரித்து கொலை செய்து புதரில் வீசிய கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் 22 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்து நெரிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். 11 ஆம் வகுப்பு மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் தேடத் தொடங்கி உள்ளனர். புதன்கிழமை காலை, சிறுமி தனது வீட்டின் அருகே புதரில் மயக்கத்தில் கிடந்ததை உறவினர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த சிறுமி ஷாடோல்ஸ் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மாலை இறந்துவிட்டார்.

representative image
இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுமியை ஆரிஃப் கான் என்ற 22 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் நோக்கத்தில் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் சிறுமி மயங்கிவிடவே இறந்துவிட்டதாக நினைத்து புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார். விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close