நேபாளத்தின் புதிய வரைபடம் உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.. மத்திய அரசு பதிலடி..

நேபாளத்தின் புதிய வரைபடம் உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.. மத்திய அரசு பதிலடி..

நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் கே.பி. ஒளி தலைமையிலான நேபாளம் கம்யூனிஸ்ட் அரசு நேபாள வரைப்படத்தை திருத்துவதற்காக அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்கான மசோதா மீது விவாதம் நடத்த கடந்த மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. புதிய நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளான லிபுகேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராவின் மூலோபாய முக்கிய பகுதிகள் உள்ளடக்கி உள்ளது.

நேபாளத்தின் புதிய வரைபடம் உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.. மத்திய அரசு பதிலடி..

இந்நிலையில் நேற்று நேபாள நாடாளுமன்றத்தில் அந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சர்ச்சைக்குரிய புதிய வரைப்படத்தை இணைத்து தேசிய சின்னத்தை புதுப்பிக்க அரசியலமைப்பின் 3வது அட்டவணையை திருத்துவதற்கான மசோதாவுக்கு நேபாளி காங்கிரஸ், ராஷ்திரிய ஜனதா கட்சி- நேபாளம் மற்றும் ராஷ்திரியா பரஜாநதிர கட்சி ஆகிய 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.

நேபாளத்தின் புதிய வரைபடம் உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.. மத்திய அரசு பதிலடி..

இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், நேபாளத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய பிராந்தியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கும் வகையில் நேபாளத்தின் வரைபடத்தை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதை நாங்கள் கவனித்தோம். இந்த விஷயத்தில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம். உரிமைகோரல்களின் இந்த செயற்கையான விரிவாக்கம் வரலாற்று உண்மை மற்றும் ஆதாரத்தை அடிப்படையாக கொண்டதல்ல மற்றும் அது ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல. மேலும் இது தற்போது நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தும் நமது தற்போதைய புரிதலை மீறுவதாகும் என தெரிவித்துள்ளது.