ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை ஓவர்…. ஓபிஎஸ் வீட்டிற்கு படையெடுத்த அமைச்சர்கள்!

 

ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை ஓவர்…. ஓபிஎஸ் வீட்டிற்கு படையெடுத்த அமைச்சர்கள்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் கைகாட்டப்பட்ட ஈபிஎஸ் போட்டியிடுவாரா என்பது குறித்து நாளை அவர்களே இணைந்து அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதனை பற்றி ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. மாறாக, அக்கூட்டத்தில் ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், இரண்டாவது வாரமாக துணை முதல்வர் ஓபிஎஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை ஓவர்…. ஓபிஎஸ் வீட்டிற்கு படையெடுத்த அமைச்சர்கள்!

முதலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு படையெடுத்த ஒட்டுமொத்த அமைச்சர்களும், அங்கு நடைபெற்ற சுமார் 2 மணி நேர ஆலோசனைக்கு பின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஆனால் அங்கு சென்ற அத்துணை அமைச்சர்களும் வரவில்லை. ஓபிஎஸூடனும் சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஆர்பி உதயக்குமார், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் மட்டுமே வருகை தந்துள்ளனர். முன்னதாக மாலை முதலே அதிமுக நிர்வாகிகளான வைத்தியலிங்கம், கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓ.பி.எஸ் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.