முதலமைச்சர் வீட்டில் குவிந்த அமைச்சர்கள்! தீவிர ஆலோசனை

 

முதலமைச்சர் வீட்டில் குவிந்த அமைச்சர்கள்! தீவிர ஆலோசனை

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து நாளை முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வரும் துணை முதல்வரும் அவரவர் ஆதரவாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

முதலமைச்சர் வீட்டில் குவிந்த அமைச்சர்கள்! தீவிர ஆலோசனை

இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வருகை, நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் காமராஜ், அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அமைச்சர் சி.வி சண்முகம், அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவுள்ள நிலையில், இன்று முதலமைச்சர், அவரது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.