முதல்வருடனான அமைச்சர்களின் ஆலோசனை நிறைவு; அறிக்கை வெளியாக உள்ளதாக தகவல்!

 

முதல்வருடனான அமைச்சர்களின் ஆலோசனை நிறைவு; அறிக்கை வெளியாக உள்ளதாக தகவல்!

சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது தான் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து பிரச்சனை எழுந்தது. இது குறித்து இதுவரை முதல்வர் பழனிசாமியோ அல்லது துணை முதல்வர் ஓபிஎஸ்ஸோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களது ஆதரவாளர்களோ போஸ்டர்கள் ஓட்டுவது, நலத்திட்ட உதவிகள் கொடுத்து ஆதரவு திரட்டுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்பதால், துணை முதல்வர் இன்று காலை மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வருடனான அமைச்சர்களின் ஆலோசனை நிறைவு; அறிக்கை வெளியாக உள்ளதாக தகவல்!

அதனைத்தொடர்ந்து ஒரு சில அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு சென்று அவரிடம் ஆலோசனை நடத்தினர். மீண்டும் துணை முதல்வரின் வீட்டிலும், முதல்வர் வீட்டிலும் ஆலோசனை நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம், 3 மணி அளவில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து நடந்து வந்த ஆலோசனையால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லங்களின் அருகே பரபரப்பாக இருந்தது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை நிறைவடைந்த நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் அறிக்கை வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் கட்சியை எந்த பிளவும் என்று கொண்டு செல்ல வேண்டும் என்பதே அதிமுக தலைமையின் குறிக்கோளாக இருக்கிறது.