சசிகலா மீது அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகார்!

 

சசிகலா மீது அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகார்!

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து அதிமுக அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகாரளித்துள்ளனர்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய போது, அவருக்கு சொந்தமான காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சசிகலா மீது அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகார்!

இதை ஏற்க மறுத்த டிடிவி தினகரன், வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான். அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகாரளித்திருந்தனர்.

சசிகலா மீது அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகார்!

இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி,வி சண்முகம் உள்ளிட்டோர் சென்னையில் டிஜிபி திரிபாதியை சந்தித்து சசிகலா மீது அதிமுக சார்பில் அமைச்சர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர். சசிகலா தமிழகம் வரும் போது அவரது காரில் அதிமுக கொடி இருக்கக் கூடாது என அமைச்சர்கள் புகாரளித்திருப்பதாக கூறப்படுகிறது.