நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

 

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கல்லூரி செமெஸ்டர் தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தேர்வு எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இது தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

இதனிடையே, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளும் இன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கொரோனாவிற்கு இடையே நடைபெறும் இந்த தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் 7 மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர 7 மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் தேர்வை தவிர்க்க தேவைப்பட்டால் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்