• February
    25
    Tuesday

Main Area

Main



கரும்புகையை வெளியிட்ட ஆட்டோ.. கடுப்பாகி ஓட்டுநரை எச்சரித்த அமைச்சர் !

auto
auto

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற காருக்கு எதிரே வேகமாக வந்த ஆட்டோ கரும்புகை வெளியிட்டது. அதனால், சிறிது நேரத்துக்கு அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனைக் கண்டு கடுப்பான அமைச்சர், தனது கார் டிரைவரிடம் காரை ஓரமாக நிறுத்தச்சொல்லிவிட்டு கீழே இறங்கினார். 

ttnn


 
பின்னர் அந்த ஆட்டோவை மடக்கிப் பிடிக்கச் சொல்லி அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தினர். இதனையடுத்து, அமைச்சரின் அருகே வந்த ஓட்டுநரிடம் ஆட்டோவில் இருந்து கரும்புகை வந்து சுற்றுச்சூழல் மாசடைகிறது, பெட்ரோலில்  ஏதேனும் கலப்படம் செய்து வண்டியை ஒட்டுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனால், பயந்து போன அந்த ஓட்டுநர் சிறிது நாட்களுக்கு முன்னர் தான் ஆட்டோவை சர்வீஸ் செய்ததாகவும் பெட்ரோலில் கலப்படம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார். அதனைக் கேட்டுக் கொண்ட அமைச்சர், இன்னும் ஒரு நாளுக்குள் இதனைச் சரி செய்ய வேண்டும், அப்படிச் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பி வைத்தார். இதனால், அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

ttn

சில நாட்களுக்கு முன்னர் கரூரில் சென்று கொண்டிருந்த அரசு சொகுசு பேருந்தை நிறுத்தி அதில் ஏறிய அமைச்சர் அங்கிருந்த பயணிகளிடம் பேருந்தில் வசதிகள் சரியாக உள்ளதா என்றும் ஏதேனும் புகார் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். இவ்வாறு திடீர் திடீர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவது வாகன ஓட்டிகளையும், அரசு ஊழியர்களையும் பீதி அடையச் செய்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.