கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

இதனிடையே கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அறிவித்தார். மருத்துவர் என்ற அடிப்படையில் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட முடிவுசெய்யப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியை அமைச்சர் விஜயபாஸ்கர் செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முன்கள பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.