சுஜித் புதைந்துபோன கருப்புநாள்! அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்…

 

சுஜித் புதைந்துபோன கருப்புநாள்! அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்…

கடந்தாண்டு ஆள்துளை கிணறு விழுந்து இறந்த சுஜித்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொடி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான பதிவை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுஜித் புதைந்துபோன கருப்புநாள்! அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்…

மணப்பாறை அருகே சுடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் 88 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் நேரில் சென்று சுஜித்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சிறுவன் இறந்த அன்றே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுஜித் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறிய பிறகு,  பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், அதிமுக சார்பாக ரூ.10 லட்சமும் வழங்கினார்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுஜித்,மீண்டு வருவாய் என கோடானுகோடி பிரார்த்தனைகளை புறந்தள்ளி
புதைந்துபோன கருப்பு நாள் இது ஊண் உறக்கமின்றி உனக்காக உறுதியோடு காத்திருந்த எங்களை கண்ணீரில் மூழ்க வைத்து நீ மறைந்து போனது மாளாத சோகமாய் மனதில் இருக்கிறது! மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம் #SujithWilson” எனக் குறிப்பிட்டுள்ளார்.