கொரோனாவின் கோரப்பிடியில் சென்னை.. கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுவதாக அமைச்சர் தகவல்!

 

கொரோனாவின் கோரப்பிடியில் சென்னை.. கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுவதாக அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியுள்ள இடம் சென்னை தான். அங்கு கொரோனா பரவல் குறைவாகவே இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய சென்னையின் முக்கியமான இடங்களில் அதிகமாக பரவியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

கொரோனாவின் கோரப்பிடியில் சென்னை.. கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுவதாக அமைச்சர் தகவல்!

இந்நிலையில் புளியந்தோப்பு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் இனிமேல் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் மக்கள் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து, மகாராஷ்டிராவில் இருந்து வந்த 900 பேருக்கு கொரோனா இருப்பதாகவும் கொரோனா உறுதி செய்யப்பட்ட 230 கர்ப்பிணி பெண்களும் குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா அதிகமாக இருக்கும் ராயபுரத்தை எண்ணி மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் சிகிச்சைக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.