மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு- முதலமைச்சர்

 

மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு- முதலமைச்சர்

மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்த கருவிகளில் 7 லட்சம் கருவிகள் தென் கொரியாவிடமிருந்தும், ஒரு லட்சம் கருவிகள் ஜெர்மனியிலிருந்து, ஒரு லட்சம் கருவிகள் அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட உள்ளன. மேலும் ஒரு லட்சம் கருவிகள் இந்தியாவிலிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளன.

மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு- முதலமைச்சர்
10 லட்சம் கருவிகளில் ஒரு லட்சம் கருவிகள் வரும் ஞாயிற்று கிழமைக்குள் தமிழகம் வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள கருவிகள் இன்னும் 3 வாரங்களுக்குள் தமிழகம் வந்தடையுமென தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. தற்போது தற்போது தமிழகத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன. இவற்றில் 3 லட்சத்து 50 ஆயிரம் கருவிகள் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்திடமும், 1 லட்சத்து 10 ஆயிரம் கருவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இருக்கின்றன. ஏற்கனவே , தென்கொரியாவிடமிருந்து வாங்கப்பட்ட 15 லட்சம் கருவிகள் மற்றும் இருப்பில் இருந்த கருவிகள் மூலம் 12 லட்சத்து 2 ஆயிரத்து இருநூற்று நான்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.