கொரோனா பாதிப்ப்பு 15 முதல் 17 நாட்களில் இரட்டிப்பானது! முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்ப்பு 15 முதல் 17 நாட்களில் இரட்டிப்பானது! முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “இந்தியாவிலேயே அதிகபட்சனாஜ 9 லட்சத்து 19 ஆயிரத்து 204 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா எப்போதுதான் ஒழியும் என கடவுளுக்கு தான் தெரியும் என்று முதல்வர் கூறியது எதார்த்தமானது. இதற்கு ஏன் எதிர்க்கட்சி தலைவருக்கு கோபம் வருகிறது? மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்களை கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இன்று 1358 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,112 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்ப்பு 15 முதல் 17 நாட்களில் இரட்டிப்பானது! முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கூடுதலாக 75,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்ணுயிரியால் ஏற்பட்டுள்ள பேரிடரை கணிக்க வல்லுநர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 முதல் 17 நாட்களில் இரட்டிப்பு விகிதத்தில் உள்ளது.முதல்வருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் அரசு வெளிப்படையாக வெளியிட்டுவருகிறது. உயிர்காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.” எனக்கூறினார்.