கொரோனாவால் 8 லட்சம் பேர் இறப்பா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

 

கொரோனாவால் 8 லட்சம் பேர் இறப்பா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனாவால் 8 லட்சம் பேர் இறந்ததாக தவறான புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார், அவர் சரியான புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும், அவர்களுக்கு எழுதி கொடுப்பவர்களும் சரியான முறையில் எழுதிக் கொடுக்க வேண்டும், அதையும் அவர் தெளிவாக பார்த்து படிக்க வேண்டும், இதற்கு மேல் நான் அவரை விமர்சனம் செய்ய விரும்பவில்லை, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற ஏழை மாணவர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர், இது தமிழக அரசிற்கும் தமிழக முதலமைச்சர்கள் கிடைத்த வெற்றி, இனிவரும் காலங்களிலும் இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடரும், இன்றைய நாள் ஒரு நெகிழ்வான வரலாற்று சிறப்புமிக்க நாள்,அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்துவதற்கான ஆணையையும் ஏற்கனவே பிறப்பித்துள்ளது,

கொரோனாவால் 8 லட்சம் பேர் இறப்பா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆபத்தான நிலையில் இருந்து வெளியே வந்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார், தற்போது வெண்டிலேட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர் விரைவில் நலமுடன் திரும்புவார் என நம்பிக்கை உள்ளது, அவர் ஒரு சிறந்த களப்பணியாளர், கொரோனா காலத்திலும் மக்களுக்காக கடுமையாக களப்பணி ஆற்றியவர்” எனக் கூறினார்.