“2.5 கோடி தடுப்புமருந்துகள் மத்திய அரசிடம் பெற்றப்பட்டு தமிழக மக்களுக்கு வழங்கப்படும்”

 

“2.5 கோடி தடுப்புமருந்துகள் மத்திய அரசிடம் பெற்றப்பட்டு தமிழக மக்களுக்கு வழங்கப்படும்”

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இரண்டு மருந்துக்கு ஒப்புதல் கொடுத்திருப்பது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம், தமிழகத்தைப் பொருத்தவரை தடுப்பு மருந்து ஒத்திகை பார்த்து அனைத்தும் தயார் நிலையில் உள்ளது, மத்திய அரசு தமிழகத்திற்கு எத்தனை மருந்துகளை வழங்குகிறதோ அத்தனை மருந்துகளையும் உரிய விதிமுறைகளின் படி வழங்குவதற்கு தமிழக அரசு தயார் நிலையில் அனைத்து ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.

“2.5 கோடி தடுப்புமருந்துகள் மத்திய அரசிடம் பெற்றப்பட்டு தமிழக மக்களுக்கு வழங்கப்படும்”

தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன் களபணியார்கள் அடையாளம் காணப்பட்டு ஒத்திகையும் செய்துள்ளோம், இந்த கொரோனா தடுப்பு மருந்து வரும் வரை முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், கொரோனா மருந்து வரக்கூடிய இடைப்பட்ட காலத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டதை போல் இல்லாமல் கவனமாக நாம் நடந்துகொள்ள வேண்டியது என்பது அவசியம், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் ஆவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,

தமிழகத்தில் முதல் கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைத்து கொடுக்க தயார் நிலையில் உள்ளோம், மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதைப் போல் நமக்கும் கொரோனா தடுப்பு மருந்தை வழங்குவார்கள். தமிழக முதலமைச்சரும் முதலாவதாக முன் களப் பணியாளர்களுக்கு கேட்டு மருந்துகளை பெறுவார். அதன்பிறகு பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். பொது மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.