மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

 

மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கோவிட் காலத்தில் சிறப்பாக பணி புரிந்து வரும் மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “29,000 பேரை கோவிட் தொற்றிலிருந்து குணப்படுத்தியுள்ளது ராஜிவ் காந்தி மருத்துவமனை. இங்கு மட்டுமே 120 தனிப்படுக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டன் தொற்றுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் தொடர்பு உள்ளவர்களில் இதுவரை 13 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரசை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. மக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை கடைபிடித்து முகக்கவசங்களை அணிந்தால் மீண்டும் ஊரடங்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார்.