ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக உள்ளது கொரோனா- அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து அரசு போராடிக்கொண்டிருக்கிறது. ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக கொரோனா உள்ளது. Remdesivier மருந்தும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றத்தை கொடுத்து வருகிறது.


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் இருந்து கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற உலக நாடுகளிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பிரான்ஸ் (15%), இத்தாலி (14%), இங்கிலாந்து (14%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது. கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 54.45 % குணமடைந்துள்ளனர்” எனக்கூறினார்.

Most Popular

கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக்காக ஈரோடு, கிருஷ்ணகிரி செல்லும் முதல்வர்!

கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூலை 15 கிருஷ்ணகிரி, ஜூலை 16 சேலம், ஜூலை 17 ஈரோடு...

நேரில் வாம்மா… பேசிக்கலாம் என்ற ஆடியோ புகழ் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை- ஆர்.எஸ்.பாரதி

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது. துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. ஆட்சியில்...

அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை, தரமான உணவு- நடிகர் விவேக்

அரசு மருத்துவமனை சிகிச்சை சிறந்த முறையில் உள்ளது என பாராட்டி நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். நம் நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலுள்ளது. இங்கு...

திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் முதல் அரசியல்...
Open

ttn

Close