ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு 99% மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

 

ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு 99% மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே கொரனோ நோயாளிகளுக்கு தமிழகத்தில் தான் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதனை நிரூபிக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கொரனோ நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்துள்ளதாக இந்தியாவிலேயே சிறந்த அரசு மருத்துவமனைக்கான விருதினைப் பெற்றுள்ளது. இதனை தமிழக அரசு மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “இந்த இக்கட்டான காலகட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மகத்தானது. தமிழகத்தில் தற்போது 1505 ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் 450 ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இந்த ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு 99% மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த இக்கட்டான காலகட்டத்தில் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை கண்டு அஞ்சிய போதிலும் அரசு மருத்துவர்களும் அரசு மருத்துவமனைகளும்தான் 80 சதவீத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கொரோனா மட்டுமின்றி அனைத்து விதமான நோயாளிகளுக்கும் அரசு மருத்துவர்கள் கடமை உணர்வை தாண்டி அர்ப்பணிப்பு உணர்வோடு சேவை ஆற்றி உள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அவர்களின் பங்கு அளப்பரியாதது. அவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய மரியாதையையும் கௌரவத்தையும் தமிழக முதல்வர் வழங்குவார். ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு 99% மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை, எனினும் அவர்கள் முகக்கவசம் அணிந்து எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.