பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பழக்கம் திமுகவிற்கு கைவந்த கலை – அமைச்சர் விஜயபாஸ்கர்

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பழக்கம் திமுகவிற்கு கைவந்த கலை – அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் விவகாரத்தில் மாணவர்களையும், பெற்றோரையும் எதிர்க்கட்சிகள் குழப்பக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் விவகாரம் குறித்து சட்ட பேரவை கூட்டத்தொடரில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரம் தொடங்கப்பட்டது.அப்போது பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது நீட் தேர்வு நடைபெற்றதில்லை என்றார். இதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி , அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பழக்கம் திமுகவிற்கு கைவந்த கலை – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் நீட் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் , “பாம்பிற்கு பால் வார்த்தது யார்? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பழக்கம் திமுகவிற்கு கைவந்த கலை. நீட் தொடர்பாக பேச காங்கிரஸுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. வரலாற்றை யாரும் மறுக்கவும் மறக்கவோ முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நிகழ்ந்த நிகழ்வை யார், யார் மீது குற்றம் கூற முடியும் ” என பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பழக்கம் திமுகவிற்கு கைவந்த கலை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தொடர்ந்து பேசிய அவர், “நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. இதில் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது.மாணவர்கள் பெற்றோர்கள் கனவு கருகி விட கூடாது என்பதே அரசின் எண்ணம். நீட் விவகாரத்தில் மாணவர்களையும், பெற்றோரையும் எதிர்க்கட்சிகள் குழப்பக்கூடாது” என்றார்.