நீட் பற்றி பேச திமுக, காங்கிரஸுக்கு அருகதை இல்லை : அமைச்சர் தடாலடி!

 

நீட் பற்றி பேச திமுக, காங்கிரஸுக்கு அருகதை இல்லை : அமைச்சர் தடாலடி!

நீட் தேர்வு பற்றி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பேச அருகதை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்ததில் இருந்தே தமிழகத்தில் பல தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முதன்முதலில் நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூதாகரமாக உருவெடுத்தது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட் பற்றி பேச திமுக, காங்கிரஸுக்கு அருகதை இல்லை : அமைச்சர் தடாலடி!
நீட்

இதனிடையே நேற்று பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதன் முடிவுகள் வரும் போது இன்னும் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களோ என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வுக்கு திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நீட் பற்றி பேச திமுக, காங்கிரஸுக்கு அருகதை இல்லை : அமைச்சர் தடாலடி!

இந்த நிலையில் நீட் தேர்வை குறித்த பேச திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அருகதை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வு விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் செயலை திமுக செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.